தகவல் பலகை : 1114
Author
TNUEF
Date Published
தனியார் கல்வி நிறுவனங்கள்
ஓபிசி/எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு அநீதி
இந்தியாவில் 517 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 45,000-க்கும் மேற்பட்ட பட்டக் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவில் வெறும் 21.5% மட்டுமே அரசு நிர்வகிப்பவை (இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ள...), 78.5% தனியார் (இடஒதுக்கீடு அமலாக்கம் இன்றி) செயல்படுகின்றன.
மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தலைமையிலான அண்மைய பாராளுமன்றக் குழுக் கணக்கெடுப்பில் அதிர்ச்சி தரும் ஒரு புள்ளி விவரம் வெளிப்பட்டது: இந்திய மக்கள்தொகையில் 90% கொண்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் மிகக் குறைவாகவே உள்ளனர் — அதாவது, பழங்குடி (ST) மாணவர்கள் 0.53% மட்டுமே, பட்டியல் சாதியினர் (SC) 0.89% மட்டுமே, இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) 11.16% மட்டுமே.
பிட்ஸ் பிலானியில் (BITS Pilani) மருந்தியல் பட்டப்படிப்பு (B.Pharm) படிக்க வருடத்திற்கு சுமார் ரூ.11 லட்சம் செலவாகிறது. நான்கு ஆண்டுக் காலப்படிவுக்கான மொத்த செலவு ரூ.44 லட்சம். ஓ.பி. ஜிந்தால் குளோபல் யூனிவர்சிட்டியில் (OP Jindal Global University) 2025-26-ல் பி.ஏ. படிப்புக்கான கட்டணமாக ரூ.6.5 லட்சமும், விடுதி கட்டணமாக ரூ.3.5 லட்சமும் வசூலிக்கப்படுகிறது. இதனால் வருடத்திற்கு சுமார் ரூ.10 லட்சம் செலவாகிறது. நீண்ட காலப் படிப்புகள், உதாரணமாக ஆறு ஆண்டுகள் நீளும் பி.ஏ. ஆனர்ஸ் கட்டிடக்கலை படிப்பு (BA Honors in Architecture) செலவினங்கள் ரூ.60 லட்சத்தைத் தாண்டுகிறது.
அதிகார வட்டத்தின் உயர்ந்த நிலைகளில் (Class-1 services) உள்ள SC/ST/OBC அதிகாரிகளுக்கே கூட இத்தகைய கட்டணங்களைச் சமாளிக்க முடியாது என்பதால், கல்வி விலக்கம் தொடர்கிறது.
https://en.themooknayak.com/india/article-155-provision-for-scstobc-quota-in-private-educational-institutions-90-of-bahujan-population-but-053-st-089-dalit-11-obc-students-enrolled
