தகவல் பலகை : 1120

Author

TNUEF

Date Published



இந்து பெண்களின்
இஸ்லாமிய மகன்கள்

இடையறாத பிளவுகள் மற்றும் முரண்பாடுகள் மட்டுமான செய்திகள் ஊடகங்களில் ஆக்கிரமித்து வரும் இக்காலத்தில், இந்தியாவின் எதிர்த் திசைகளான தெற்கில் கேரளமும், வடக்கில் ராஜஸ்தானும், மனிதம் மற்றும் சகோதரத்துவம் என்ற நாட்டின் விழுமியங்களை மீண்டும் நினைவூட்டி உள்ளன.

இரண்டு கதைகளை
நம்பிக்கையின் விளக்குகள் போன்று வழங்கியுள்ளன. இந்தக் கதைகள் இரண்டு இந்து பெண்களின் இறுதிச்சடங்குகளை அவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்து மத சடங்குகளின்படி செய்து வைத்த இரண்டு இஸ்லாமிய "மகன்களின்" மனிதநேயச் செயல்களைச் சொல்கின்றன.

ராஜஸ்தானின் பீல்வாரா என்ற ஆரவாரமான நெசவு நகரில், 67 வயதான சாந்தி தேவி கடந்த 15 ஆண்டுகளாகத் தனியாகவே வாழ்ந்தார். மகாத்மா காந்தி மருத்துவ மனையில் சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தபோது, ஒரு கேள்வி நிலவியது: அவரின் இறுதிச்சடங்குகளை யார் செய்வார்கள்? அதற்கான பதில் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்தது. ஆம்! அவரின் அண்டை வீட்டுக்கார இஸ்லாமியர் ஆசார் அலி கான். ஆசாருக்கு, சாந்தி தேவி அண்டை வீட்டுக்காரர் மட்டுமல்ல; அவரை சிறு வயதிலிருந்தே அன்புடன் பார்த்துக்கொண்ட தாய்மையுள்ள ஒரு உருவம்.

இதோ இதேபோன்ற கருணைமிகு இரண்டாவது கதை. 2000 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நிகழ்ந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 44 வயதான ராகி, "பெனடிக்ட் மேன்னி சைக்கோ சோஷியல் ரீஹாபிலிடேஷன்" மையத்தில் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்தார். மனநலக் குறைகளிலிருந்து மீண்டுவரும் அவர், தன் குடும்பத்தையோ வீட்டையோ நினைவுகூர முடியவில்லை. தனது வாழ்நாள் முடிவை நெருங்கியபோது, மையத்தை நடத்தி வந்த துறவியரிடம் அவர் இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார். தன் இறுதிச்சடங்குகள் இந்து மரபுப்படி நடத்தப்பட வேண்டும்.

அவர் மறைந்த பின், துறவியர் கடினாம்குளம் கிராமப்பஞ்சாயத்து முஸ்லிம் வார்டு உறுப்பினரான டி. சஃபீரை அணுகினர். ஒரு நொடியும் தயங்காமல் சஃபீர், அவரின் மகனாகக் கருதி அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

("மூக்நாயக்" - 16.09.2025)

https://en.themooknayak.com/india/how-2-muslim-youths-became-sons-to-perform-hindu-last-rites-in-act-of-ultimate-compassion