தகவல் பலகை : 1121
Author
TNUEF
Date Published
இனப் படுகொலையே!
ஐநா விசாரணை மன்றம் அறிவிப்பு
“காசாவில் இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை தான்”, என்றும்; “அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலினால் தான் இனப் படுகொலை நடக்கிறது” என்றும்; ஐ.நா. விசாரணை ஆணையம் அறிவித்துள்ளது.
2023 அக்டோபர் 7 அன்று காசாவின் மீது இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக போரைத் துவங்கியது. அதன் பிறகு, கடந்த 22 மாதத்தில் 64,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள மக்களை திட்டமிட்ட பட்டினியில் தள்ளியும் இஸ்ரேல் கொடூர மாக இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது. காசாவில் ஒவ்வொரு நாளும் மூன்றில் ஒரு குழந்தையும் பசி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் சார்பில் சுயாதீனமான மனித உரிமை ஆணையக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது விசாரணையை முடித்து 72 பக்க அறிக்கையைத் தற்போது தாக்கல் செய்துள்ளது.
