தகவல் பலகை : 1123

Author

TNUEF

Date Published


பாலிவுட்டில் பரியேறும் பெருமாள்

//சங்கீதா குமாரி நாக்//

இந்தியச் சமூகத்தில் சாதி மறுப்பு காதல் என்பது எப்போதும் சிரமங்களையும் சந்தித்து வந்துள்ளது.

ஒருபோதும் அது வெறும் தனிப்பட்ட விசயம் அல்ல; அது சமூக, அரசியல் மற்றும் ஆழமான சமத்துவமற்ற சமூக நிலைமைகளோடு தொடர்புடைய ஒன்றாகும்.

இப்படியான காதல், சாதி அமைப்பின் அடித்தளத்தையே சவாலுக்கு உட்படுத்தி, சமத்துவத்தை வலியுறுத்துகிறது.

தடக்–2 இப்படியான சாதி மறுப்பு காதல் கதையை மிகுந்த தீவிரத்தோடு வெளிப்படுத்துகிறது. இது பரியேறும் பெருமாள் படத்தின் மறுபதிப்பாக இருந்தாலும், பாலிவுட் எடுத்துள்ள இந்தத் துணிச்சலான முயற்சி பாராட்டத்தக்கது.

ஏனெனில், இந்தப் படம் சாதி மறுப்பு காதலை பாசத்தை வெறும் இருவருக்கு இடையிலான நேசமாக மட்டுமல்லாமல், பிராமணியத்தையும், சாதி அடிப்படையிலான சமத்துவமின்மையையும் சவாலுக்கு உட்படுத்தும் ஆழமான போராட்டமாகவே காட்டுகிறது. இதன் மூலம் சமூகத்தின் கசப்பான உண்மைகள் வெளிப்படுகின்றன,

சாதி ஒழிப்பிற்கான அம்பேத்கரின் பார்வையுடனான கதையாடலாக இந்த படம் விரிகிறது.

https://www.thehindu.com/entertainment/movies/dhadak-2-movie-review-siddhant-chaturvedi-triptii-dimri-prosaic-version-pariyerum-perumal/article69882529.ece