தகவல் பலகை : 1125

Author

TNUEF

Date Published


தண்டகாரண்யம்

முதல் காட்சியில் இருந்து பார்வையாளர்களை அந்த அடர்ந்த வனம் உள்இழுத்துக் கொள்கிறது . அதிகாலை, மதிய வேளை, மாலை, நடு இரவு என எல்லாப் பொழுது களையும் சுவீகரித்துக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்ட பிரம்மாண்டமாயிருக்கிற பேரழகு அடர்ந்த வனம் - அது ஒவ்வொரு ப்ரேமிலும் பிரமிக்க வைக்கிறது .

தண்டகாரண்யம் பெருவனம் தானே?

மலை வாழ்வு, வனச்சரக அதிகாரம், உள்ளூர் முதலைகளின் ஆதிக்கம் ஆகியவற்றோடு துவங்கும் கதையின் மொத்த பாரத்தையும் அரைமணிநேர இறுதிக்காட்சி உலகத்தரத்துக்கு தூக்கிக்கொண்டு போகிறது.

நாம் அன்றாடம் கேட்டுக்கடந்து போகும் முக்கியச்செய்திகளின் பின்னாடி ஒளிந்திருக்கிற அதிர்ச்சி யூட்டும் உண்மைகளைத் தேடச் செய்யும் அற்புதமான கதை.

திரையரங்கை விட்டு வெளியேறியகணத்திலிருந்து நினைவுகள் முழுக்க வியாபித்துவிடுமானால், ஒரு படைப்பு காலங்கடந்தும் பேசப்படும்.

அப்படியொரு படைப்பாகிய தண்டகாரண்யம்.

வாழ்த்துக்கள் தோழர்
அதியன் ஆதிரை.

- சுந்தரப்பா காமராஜ்