தகவல் பலகை : 1128
Author
TNUEF
Date Published
கவிப்பித்தன்
"மரண ருசி" சிறுகதை
எவ்வுயிரையும் தம்முயிர் போல் பாவிப்பதாகவும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்வதாகவும் சொல்லப்படும் கூற்று தாவரங்களுக்கும் நீட்டிக்கப்படுமானால் மனிதகுலம் எதை உட்கொண்டு வாழும் என்கிற கேள்வி எழுகிறது.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் நெஞ்சமுள்ள வள்ளலாருக்கு பயிரை வாடாமல் வளர்த்துக்கொண்டே இருப்பது நோக்கமல்ல. அதன் விளைச்சலை மக்களின் பசியாற்ற பயன்படுத்துவது தான் என்றுமொரு பொருள் சொல்லமுடியும். வடலூர் சத்திய தரும சாலையில் அவர் மூட்டிய அடுப்பு இன்றளவும் பசித்தீயை அணைப்பதற்காக எரிந்துகொண்டிருக்கிறது.
மனிதர்களின் உணவுக்காகவும் நேர்த்திக்கடனுக்காகவும் பயன்கருதி வளர்க்கப்படும் விலஙகுகளையும் நாம் இந்தளவில் பார்ப்பதே போதுமானது. ஆனாலும் அவற்றை வளர்க்கும் காலத்தில் ஏற்பட்டுவிடும் பிணைப்பு எந்தளவுக்கு நெகிழ்ச்சியானது என்பதை உணர்ச்சிப்பெருக்காக விவரிக்கிறது கவிப்பித்தனின் மரண ருசி.
உக்கிரமான, ரத்தக்காவு படையல் கேட்கும் சாமிகளுக்கு பொங்கலும் புளியோதரையும் படைத்து மதம் மாற்றும் மோசடி நடக்கும் காலத்தில் முப்பூசையிடும் வழக்கத்தை மீள நினைவூட்டுகிறது இக்கதை. பொதுப்புத்தியில் அருவருக்கத்தக்கதென பதியவைக்கப்பட்ட பன்றியை நேசிக்கவும் பூஜிக்கவுமானதாகவும் காட்டும் இக்கதை,
நாட்டார் வழிபாட்டுமுறை மற்றும் உணவுப்பண்பாடு குறித்த ஆவணமாகவும் உள்ளது.
- ஆதவன் தீட்சண்யா
