தகவல் பலகை

தகவல் பலகை : 1131

Author

TNUEF

Date Published




காவல்துறை கட்டிய கதைகளும் - புனைவு காட்சிகளும்

அதிர்ச்சியூட்டும் அம்பலமாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் (2025 செப்டம்பர் 17) வெளியிட்ட ஆய்வு அமைந்துள்ளது. அது 2020-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கொடிய கலவரங்களைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்குகள் பற்றியது.

போலியாக உருவாக்கப்பட்ட சான்றுகள், கற்பனை சாட்சிகள், காவல்துறை கட்டளையின் அடிப்படையிலான வாக்குமூலங்கள், விசாரணை அதிகாரிகள் சேர்த்துக் கூறிய யதார்த்தமற்ற "உண்மைகள்", செயற்கை கதைகளம் ஆகியவற்றின் காரணமாக தொடர் விடுதலைகள் பெரும் எண்ணிக்கையில் நடந்தேறி வருகின்றன.

அந்த நாளிதழ் ஆய்வு செய்த 93 விடுதலை தீர்ப்புகளில் 17 வழக்குகளில் விடுதலைக்கு இது போன்ற காரணங்கள் இருந்தது அம்பலத்திற்கு வந்துள்ளது.

மொத்தம் 2020 கலவரங்களுக்குச் சம்பந்தமான 695 வழக்குகள் தற்போது டெல்லி கீழமை நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. இதில் 2025 ஆகஸ்ட் மாத இறுதிவரை 116 வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த 116 வழக்குகளில் 97 வழக்குகள் விடுதலையாக முடிவடைந்துள்ளன.

(நன்றி : பீப்பிள்ஸ் டெமாக்ரசி - சவேரா)