தகவல் பலகை

தகவல் பலகை : 1132

Author

TNUEF

Date Published



பட்டியல் சாதித் துணைத்திட்ட கல்லூரிகள்

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு

உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகர், கண்ணௌஜ், ஜாலௌன் மற்றும் சஹாரன்பூரில் பட்டியல் சாதி துணைத் திட்டத்தின் கீழ் நான்கு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டன. அவற்றில் 70% இருக்கைகள் பட்டியல்சாதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. இந்தக் கல்லூரிகளுக்கான நிதி, முற்றிலும் பட்டியல்சாதி சமூக நலனுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள மத்திய அரசின் சிறப்பு திட்டமான DAPSC (Development Action Plan for Scheduled Castes) வழியாக வழங்கப்படுகிறது.

ஆனால் இங்கு தரப்பட்டுள்ள பட்டியல் சாதியினருக்கான 70 % ஒதுக்கீடு, 1992 இந்திரா சஹானி தீர்ப்பு விதித்த 50 % இட ஒதுக்கீடு வரையறையை மீறுவதாக கூறி அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்டோர், டி என் சாதி துணை திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் கல்லூரிகளுக்கு 50% வரையறை பொருந்தாது என்று மேல் முறையீடுக்காக உச்ச நீதிமன்றம் சென்றுள்ளனர்.

(மூக்நாயக் - 25.09.2025)

https://en.themooknayak.com/dalit-news/supreme-court-to-decide-if-50-quota-cap-applies-to-colleges-built-exclusively-for-scs