தகவல் பலகை : 1133
Author
TNUEF
Date Published
கிழக்கிந்தியக் கம்பெனியும் சாதியும்
1795: "உயர்" சாதியினர் ஆதரவைப் பெறும் நோக்கில் கிழக்கிந்தியக் கம்பெனி மரண தண்டனையிலிருந்து பிராமணர்களுக்கு விலக்கு அளித்தது.
1816: சிறு குற்றங்களில் ஈடுபடும் "கீழ்" சாதியினருக்கு மூர்க்கத்தனமான தண்டனை ஒன்றை கம்பெனி விதித்தது. அதன்படி அவர்களின் கால்கள் ஸ்டாக்ஸ் எனப்படும் மரச் சட்டகத்தில் இருக்கும் துவாரங்களுக்குள் அசைக்க முடியாதபடி பொருத்தி வைக்கப்படும்.
1817: பிராமணர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கிற கொள்கையை மாற்றிய கம்பெனி பனாரஸில் இருக்கும் பிராமணர்களுக்கு அந்த தண்டனையை வழங்கும் அதிகாரத்தை மீண்டும் கையில் எடுத்தது.
1829: உயர்சாதியினரின் செல்வாக்கினை மீறி வில்லியம் பெண்டிங் பிரபு உடன்கட்டை ஏறுதல் என்கிற நடைமுறையை ஒழிக்கும் சட்டத்தை இயற்றினார்.
1850:சாதி மறுக்கப்பட்ட ஓர் இந்துவின் பாரம்பரிய சொத்துரிமையை பாதுகாக்கும் நோக்கில் டல்ஹௌசி பிரபு கொண்டு வந்த சட்டம் சாதி பாதிப்புகளுக்கு எதிரான தேசிய அளவிலான முதல் சட்டம்.
1855:சத்திரியர் அந்தஸ்து வேண்டும் என்கிற ராஜபுத்திரர்களின் கோரிக்கையை லண்டனிலிருந்து பிரிவி கவுன்சில் ஏற்றது. சத்திரியர்கள் அனைவரையும் பரசுராமர் அழித்துவிட்டதாக கூறும் பிராமணிய கருத்தாக்கத்தை இம் முடிவு மறுதலித்தது.
("சாதிப் பெருமை" - மனோஜ் மிட்டா தமிழில் : ஆர்.விஜயசங்கர்)
