தகவல் பலகை : 1134
Author
TNUEF
Date Published
கனடா பூர்வீக குடி ஒடுக்குமுறை
குழந்தைகளின் துயர பகிர்வு நாள்
செப் 30
"தேசிய உண்மை மற்றும் சமரச நாள்" என்று செப்டம்பர் 30 ஐ கனடாவில் அனுசரிக்கிறார்கள்.
பூர்வீக குடியினரின் பண்பாட்டை அழிப்பதற்கும், பூர்வீக குடி குழந்தைகளை அக்கலாச்சாரத்திலிருந்து பிரித்து எடுப்பதற்கும் குடியேறிய ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டவை "உறைவிடப் பள்ளிகள்".
அங்கு பிற்காலத்தில் பல பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிகழ்வு சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியது.
உறைவிட பள்ளிகள் உண்மையில் சிறைச்சாலைகளே. வீடுகளுக்கு திரும்ப முடியாமல் போன குழந்தைகள், அப் பள்ளிகளில் இருந்து உயிர் தப்பியவர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோரின் காயம், வலிகளை பகிர்ந்து கொள்கிற நாளாக இது அனுசரிக்கப்படுகிறது.
உறைவிடப் பள்ளிகளின் துயரமான மற்றும் வேதனையான வரலாறையும், அதன் தொடர்ச்சியான தாக்கங்களையும் நினைவுகூருவது, சமரச செயல்முறையின் ஒரு முக்கிய அங்கமாக கனடா சமூகத்தின் ஜனநாயகத்தை நேசிப்பவர்களால் கருதப்படுகிறது.
இது கூட்டாட்சி சட்டப்படியும் நாடாளுமன்றத்தின் சட்ட திருத்தங்களின் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறை நாள்.
