தகவல் பலகை : 1140
Author
TNUEF
Date Published
"எய்ம்ஸ்" சாதி பாகுபாடு
பட்டியல் சாதி ஆணையம் நோட்டீஸ்
பட்டியல் சாதி மக்களுக்கான தேசிய ஆணையம் (NCSC) தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு (AIIMS) நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ், “பட்டியல் சாதி (SC) மருத்துவ மாணவர்களுக்கு மனித உரிமை மீறல்கள் மற்றும் பாகுபாடுகளிலிருந்து பாதுகாப்பு தருவது” குறித்தது ஆகும்.
பட்டியல் சாதி மாணவர்கள் தங்கள் விருப்பமான மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கே பல சவால்களை எதிர்கொள்கிறார்கள்; அதில் பயிற்சிக்கான (coaching) நிதிச் சுமையும் அடங்கும். பல நேரங்களில் சக மாணவர்கள், அறைத் சகாக்கள், பேராசிரியர்கள் ஆகியோரிடமிருந்து சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள். இதனால் சிலர் தங்கள் படிப்பை பாதியில் விட்டுவிடவோ அல்லது தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளவோ நினைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
"சாதி அடிப்படையிலான பாகுபாடு இன்றும் கூட முக்கியமான கல்வி நிறுவனங்களில் நிலவுவது மிகவும் துரதிர்ஷ்டகரமானது. பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த முதுநிலைப் பட்ட மாணவர்கள் கல்வி மற்றும் பிற விஷயங்களில் பாகுபாடான கருத்துக்களை எதிர்கொள்கிறார்கள். பலர் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்ற பயத்தால் புகார் அளிக்கவில்லை. உடனடி நடவடிக்கை எடுத்து பாதுகாப்பான, பாகுபாடற்ற சூழலை உருவாக்குவது அவசியம். மேலும், மருத்துவமனையில் மனிதாபிமானமற்ற அளவுக்கு நீண்ட பணிநேரம் குறித்த புகார்களும் தொடர்ந்து எங்களுக்கு வருகின்றன” என்று புகார் மனுவில் டாக்டர் லக்சிய மித்தல் (ஐக்கிய மருத்துவர் முன்னணி - UDF) கூறியுள்ளார்.
“பல மாணவர்கள் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரம் வரை தொடர்ச்சியான பணிச் சுமைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; சில நேரங்களில் இது 72 மணி நேரம் வரை நீள்கிறது. இத்தகைய கடுமையான, மனிதாபிமானமற்ற பணிச்சூழல் ஒவ்வொரு ஆண்டும் பல திறமையான மாணவர்கள் தற்கொலை செய்வதற்கோ அல்லது படிப்பை விட்டு விலகுவதற்கோ வழிவகுக்கிறது. சாதி அடிப்படையிலான துன்புறுத்தல், அவமதிப்பு, மற்றும் அனைத்து விதமான பாகுபாடுகளுக்கும் ஆளாகிறார்கள். மேல் அதிகாரிகளிடமிருந்து மட்டுமல்ல, சக மாணவர்களிடமிருந்தும், அறைத் தோழர்களிடமிருந்தும் கூட. இது அவர்களது மன அழுத்தத்தை பல மடங்கு அதிகரித்து, சிலரைக் கடுமையான முடிவுகளுக்குத் தள்ளுகிறது.” என்கிறது அந்த புகார்.
Rights panel notice to AIIMS: SC/ST medicos facing caste bias, long duty hours | Latest News Delhi https://www.hindustantimes.com/cities/delhi-news/rights-panel-notice-to-aiims-sc-st-medicos-facing-caste-bias-long-duty-hours-101759515510746-amp.html
