தகவல் பலகை : 1141
Author
TNUEF
Date Published
காலணி எறிந்தவரை
கழற்றி விட்ட
பார் அசோசியேஷன்
இந்திய உச்ச நீதிமன்றத்தில் அக்டோபர் 6 அன்று தலைமை நீதிபதி நோக்கி "சனாதன காவலர்" ஒருவர் காலணியை எறிந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய வழக்குரைஞர்கள் பேரவை (Bar Council of India - BCI) உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை உடனடி இடை நீக்கம் செய்துள்ளது. நாடு முழுவதும் எந்தவொரு சட்டப் பணியிலும் அவர் ஈடுபடுவதையும் தடை செய்துள்ளது.
இதற்கிடையில், அனைத்து இந்திய வழக்குரைஞர்கள் நீதிக்கான சங்கம் (All India Lawyers Association for Justice - AILAJ) – டெல்லி பிரிவு – இந்தச் செயலினை நீதித்துறையின் புனிதத்தையும் நம்பகத்தன்மையையும் சீர்குலைப்பதற்கான “தேசியத்தின் போர்வையில் மறைந்துள்ள அராஜகத் திட்டம்” என கடுமையாக கண்டித்துள்ளது.
இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நடத்தப்பட்ட இந்த வெறித் தாக்குதல், சட்டத் துறையின் எல்லா வட்டாரங்களிலும் பரவலான கோபத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்ற கோரிக்கைகளை பரவலாக எழச் செய்துள்ளது.
[ "மூக்நாயக்" - 06.10.2025 ]
