தகவல் பலகை : 1169
Author
TNUEF
Date Published
காவல்துறை பதவி உயர்வு, பணியிடத்தில் சாதி பாகுபாடு
உ.பி முன்னாள் டி.ஜி.பி கருத்து
திறமை மற்றும் நேர்மை இருந்தபோதிலும், பதவி அல்லது பதவி நியமனம் (Posting) என்று வரும்போது, தகுதியை விடச் சாதியே முக்கியப் பங்காற்றுகிறது என்று பல ஓய்வுபெற்ற தலித் அதிகாரிகள் கூறுகின்றனர்.
உத்தரப்பிரதேச பணி தொகுப்பைச் (காடர்) சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) எஸ்.ஆர். தாராபுரி கூறுகையில், "காவல்துறை அமைப்பு நமது சமூகத்தின் துல்லியமான பிரதிபலிப்பு. சமூகத்தில் நிலவும் சாதி மற்றும் மதப் பாகுபாடு காவல்துறையிலும் காணப்படுகிறது." என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "பதவி நியமனத்தின்போது, குறைவான பிரச்னைகள் உள்ள மாவட்டங்களும், நல்ல காவல் நிலையங்களும் வழங்கப்படுவதில்லை. கண் துடைப்புக்காக தலித்துகள் காவல் நிலைய அதிகாரியாக (SHO) நியமிக்கப்படுகிறார்கள், ஆனால் அவை கடினமான சூழல்களை கொண்ட காவல் நிலையங்களாக இருக்கும். தலித் அதிகாரிகளின் ஆண்டு அறிக்கைகள் (Annual Reports) தயாரிப்பிலும் பாகுபாடு காணப்படுகிறது." என தெரிவித்தார்.
இந்தியாவில் காவல்துறை, உயர் அதிகார மட்டத்தில் சாதி பாகுபாடு நீடிக்கிறதா? ஓர் அலசல் - BBC News தமிழ் https://share.google/QOpmzX6tehEqs5mKs
