தகவல் பலகை : 1170
Author
TNUEF
Date Published
டாப் 1% (எதிர்) பாட்டம் 50%
2655 மடங்கு
செல்வ அபகரிப்பு உயர்வு
இந்தியாவில் கடந்த சில பத்தாண்டுகளில் அதி செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான செல்வப் பிளவு பெருமளவில் அதிகரித்துள்ளது.
2000 முதல் 2023 வரை, டாப் 1 சதவீதம் செல்வந்தர்களின் செல்வ அபகரிப்பு 62 சதவீதம் உயர்ந்துள்ளதாக, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஜி20 பணிக்குழு அறிக்கை கூறுகிறது.
தென்னாபிரிக்கா தலைமையிலான ஜி 20 குழுவின் இந்த அறிக்கை, உலக மக்கள் தொகையில் மிகச் செல்வந்த நிலையில் உள்ள டாப் 1 சதவீதம், 2000ஆம் ஆண்டிலிருந்து உருவான புதிய செல்வத்தின் 41 சதவீதத்தை குவித்துள்ளதாகக் கூறுகிறது.
இதற்கு மாறாக, மனிதகுலத்தின் கீழ்த்தட்டு 50 சதவீத மக்கள் தங்களின் செல்வத்தை வெறும் 1 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளனர் என்று உலக சமத்துவ ஆய்வகத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி அறிக்கை குறிப்பிடுகிறது.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முதல் 1 சதவீத செல்வந்தர்கள் தங்களின் சராசரி செல்வத்தை கீழ்த்தட்டு 50 சதவீத மக்களை விட 2,655 மடங்கு அதிகமாக உயர்த்தியுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
https://www.dw.com/en/india-top-1-became-really-wealthy-since-2000-g20-report/a-74608429
