கவல் பலகை : 1172

Author

TNUEF

Date Published


1946: ஸ்டேன்ஸ் மில்லின் துப்பாக்கிச் சத்தம்

வீரம் மிக்க கோவை மண்ணில் சிஐடியு மாநாடு


1948ஆம் ஆண்டு நடந்த மிகப் பெரும் போராட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இந்தப் போரின் முன்னோட்டத்தைக் கோயம்புத்தூர் பார்த்தது. அதுதான் 1946 நவம்பர் 11ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு.


ஸ்டேன்ஸ் குழுமத்தின் கோயம்புத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்லில், குறைந்த ஊதியத்துக்கும், மோசமான பணிச்சூழ லுக்கும் எதிராகப் பெண்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். நிர்வாகம் கூலிப்படைகளுடன் போலீஸை ஏவியது. அந்த நாளில், சுமார் 6,000 தொழி லாளர்கள் திரண்டிருந்தனர். போலீஸ் அத்துமீறிச் செயல்பட்டபோது, தொழிலாளர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அம்மு என்ற பெண் தொழிலாளி, போலீ ஸின் தாக்குதலுக்கு உள்ளாகி, குண்டடிபட்டு, அங்கேயே இரத்த வெள்ளத்தில் சரிந்து முதல் வீரமர ணம் அடைந்தார். தொழிலாளர்கள் கொந்தளிப்பின் உச்சத்திற்கு சென்றனர். ஆவேசப் போராக மாறி யது. போலீஸ் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளியது.


இந்தக் கோரச் சம்பவம் குறித்துப் ‘பீப்பிள்ஸ் ஏஜ்’ (People’s Age) பத்திரிகையில் தோழர் என். கே. கிருஷ்ணன் அவர்கள் அப்போது எழுதிய கட்டுரை யில், அம்மு உட்பட மொத்தம் 12 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருக்கலாம் என்று விவரித்துள்ளார். இந்த அடக்குமுறையின் வீச்சை எதிர்கொண்ட தொழிலாளர்கள், சம்பவத்திற்குப் பின்னரும் அஞ்சவில்லை. அவர்கள் தங்கள் தலை வர்களைப் பாதுகாக்கவும், போலீஸின் கொடூரமான நடவடிக்கைகளை எதிர்த்துப் பல நாட்கள் போராட்டத்தை உறுதியுடன் தொடரவும் செய்தனர்.


தோழர் என். கே. கிருஷ்ணன் அவர்கள் பதிவு செய்த வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன: “உழைக்கும் மக்கள் சிந்திய ரத்தம், மண்ணில் கலந்து வீணாகப் ்போய் விடாது. அது, விடு தலைக்கான விதையாக முளைக்கும்.”


எஸ்.பி. ராஜேந்திரன்

தீக்கதிர்