தகவல் பலகை : 1205
Author
TNUEF
Date Published
அதிகாரிகளின் அலட்சியம்
ஆண்டுக் கணக்கில் அவலம்
பட்டியல் சாதி/ பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஆண்டு கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு பெறுவார்கள் என்ற விதிமுறைகள் இருந்தபோதும், தமிழ்நாட்டின் பல அரசு மருத்துவக் கல்லூரிகள் அவர்களிடமிருந்து கட்டணத்தை வசூலித்ததோடு, இதுவரை திருப்பித் தரவும் தவறியுள்ளன.
உண்மையில், கடந்த மூன்று ஆண்டுகள் MD/MS படிப்பை முடித்த பல மருத்துவர்கள் இன்றும் பணத்தை திருப்பிப் பெற காத்திருக்கின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பல மருத்துவர்களிடம் கேட்டபோது, அவர்கள் 2021ஆம் ஆண்டின் முதல் ஆண்டுக்கான கல்விக் கட்டணமாக ₹30,000 செலுத்தியிருந்தும், இதுவரை திருப்பிப் பெறவில்லை என தெரியவந்தது.
வட தமிழகத்தின் ஒரு மருத்துவக் கல்லூரியில், முதுநிலை மருத்துவர்கள் மூன்று ஆண்டுகளுக்கும் கட்டணம் செலுத்தி, மொத்தம் ₹90,000 வரை கட்டியுள்ளனர்.
இந்த பிரச்சனையை தொடர்ந்து முன்வைத்து வந்த சில மூத்த மருத்துவர்கள், அதிகாரிகளின் அலட்சியத்தால் இது கடந்த சில ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
[நன்றி: தி இந்து - 08.12.2025]
