தகவல் பலகை : 1167
Author
TNUEF
Date Published
கோவிலில் அமரலாமா?
துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட தலித்
ஊடக செய்திகள் தெரிவிக்கும் உத்தரப் பிரதேசம், ஷாஜகான்பூர், மதனபுர் கிராமத்தில் நடந்தேறியுள்ள வன்கொடுமை.
கோவிலில் அமர்ந்ததற்காக தலித் ஜாதவ் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட கொடுமை.
நன்ஹுகு ஜாதவ் (வயது 70) கோவிலில் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அதே கிராமத்தை சேர்ந்தவர் அவரை எழுந்து செல்லும்படி கூறியுள்ளார். அவர் மறுத்ததால், அவரைத் தாக்கி அறைந்ததுடன், காலணியால் அடித்ததாக கூறப்படுகிறது.
ஜாதவ் தெரிவித்ததாவது, அந்த நபர் தன்னை சாதி அடிப்படையிலான இகழ்ச்சிப் பேச்சுக்களால் அவமதித்ததோடு, துப்பாக்கியைக் காட்டி சுட்டுக் கொல்லுவேன் என்று மிரட்டியதாகும்.
“அவன் துப்பாக்கியை அசைத்துக் காட்டி ‘உன்னை கொன்று விடுவேன்’ என்றான். நான் உயிர் காப்பாற்றிக் கொள்ள ஓடி வீட்டுக்குள் சென்றேன்,” என ஜாதவ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
*
