தகவல் பலகை

தகவல் பலகை : 1206

Author

TNUEF

Date Published

"மகாபோதி" கோயில் :

70 ஆண்டுகளாக போராடும் பௌத்தர்கள்


கௌதம புத்தர் ஞானம் பெற்ற "மகா போதி" அமைந்துள்ள மகாபோதி புத்த கயா கோயில் உரிமைக்காக 70 ஆண்டுகளாக பௌத்தர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். சட்டப் போராட்டமும் உச்ச நீதிமன்றத்தில் நடந்தேறி வருகிறது.

தற்போது இந்துக்கள் 4 பேரும், பௌத்தர்கள் 4 பேரும் நிர்வாகத்தில் இருப்பது என்பதும், தலைமைப் பொறுப்பு இந்துவிடம் இருப்பது என்பதும் நடைமுறையில் உள்ளது. இது 1949 புத்தகயா கோயில் நிர்வாக குழு சட்டத்தின் வரையறை ஆகும். (Bodh Gaya Temple Management Committee - BTMC - Act, 1949). ஒரு புத்த கோயிலுக்கு இத்தகைய ஏற்பாடு எப்படிப் பொருந்தும், அநீதி அல்லவா என்பதே பௌத்தர்களின் கேள்வி.

பௌத்தர்களின் மிக முக்கியமான தலமான மகா போதி கோயில் தங்கள் வசம் முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உணர்ச்சிப்பூர்வமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நாட்டின் பல பகுதிகளில் அவர்கள் நடத்தி வருகிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கின் கடைசி அமர்வு டிசம்பர் 9, 2025 அன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது 4 வாரங்கள் தள்ளிப் போயிருப்பது பௌத்தர்களை வருத்தத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளதாக "மூக் நாயக்" இதழ் செய்தி கூறுகிறது.

https://en.themooknayak.com/minority-news/supreme-court-adjourns-bodh-gaya-temple-case-hearing-petitioners-seek-4-weeks-for-rejoinder