தகவல் பலகை : 1143
Author
TNUEF
Date Published
மனுநீதி மண்டைக்குள்...
சாதி வன்மமும் திமிரும்
இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் மீது ஒரு மூத்த சனாதனி வழக்கறிஞர் காலணி எறிந்த சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சியடையச் செய்தது.
ஆனால், அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே தெலங்கானா மாநிலத்தின் சித்திபேட்டில் இன்னொரு அவமானகரமான சம்பவம்u நிகழ்ந்தது. அங்கு இரு வழக்கறிஞர்கள் வாட்ஸ்அப் குழுவில் தலைமை நீதிபதி கவாய் அவர்களை குறிவைத்து ஜாதி அடிப்படையிலான அவதூறு மற்றும் அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டனர். சித்திபேட் காவல்துறை இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தது, ஆனால் அவர்கள் தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சித்திபேட் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ப்ரொட்டுடூரி ஸ்ரீகாந்த், இன்னொரு வழக்கறிஞர் ராதா ரமணதாஸ் என்பவர் கவாய் மீது இட்ட வெறுப்பு விமர்சனத்தின் பின்னூட்டமாக, தெலுங்கில்,
“கனகபு சிம்ஹாசனமுன…” என்று குறிப்பிட்டார்.
இந்த வரி 13ஆம் நூற்றாண்டின் பிரசித்தமான தெலுங்கு கவிஞர் பட்டேனா பூபாலுடு எழுதிய “சுமதி சதகம்” என்ற நூலில் இருந்து எடுத்தது. வெளிப்படையாகப் பார்த்தால் இது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் முழு பின்னணியில் இதன் பொருள் மிகவும் கீழ்த்தரமானது.
அந்தக் கவிதையின் உட்பொருள் என்னவெனில் — “ஒரு நாயை பொன் சிம்மாசனத்தில் அமர்த்தி,ஐ நல்ல நேரத்தில் அவனை அரசனாக முடி தரித்தாலும், அதன் இயல்பு மாறாது” என்பதாகும்.
அரசியல் சாசனம் குடியிருக்க வேண்டிய அந்த இரண்டு வழக்கறிஞர்கள் மண்டைக்குள் மனு நீதி
குடியிருந்தால் இப்படிப்பட்ட வன்மமும், திமிரும்தான் இருக்கும்.
கவாய் அவர்களே!
உங்கள் மீதான தாக்குதல்
சமூக நீதியின் மீதான தாக்குதல். உங்களோடு நாங்கள்...
உங்கள் உயரத்தை
தொட முடியாத
அவர்களின் எச்சில்கள்
அவர்களின்
முகங்களிலேயே
விழுகிறது!
