தகவல் பலகை

தகவல் பலகை (1079) : 06.08.2025

Author

TNUEF

Date Published

எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை, பெண்கள் சதவீதம் பாதாளத்தில்

சு.வெங்கடேசன் எம்.பி அவர்களின் கேள்விக்கு (எண். 2469/04.08.2025) நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதுரி அளித்துள்ள பதிலில் இருந்து…

எல்.ஐ.சியின் இயக்குனரவையில் மொத்தமுள்ள 13 பேரில் பட்டியல் சாதியினர், சிறுபான்மையினர் எவருமே இல்லை. ஒரே ஒருவர் பழங்குடியினர். ஒரே ஒரு பெண். எல்.ஐ.சியின் தலைவர் பொறுப்பில் உள்ளவரும் மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்தவர் இல்லை.

அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இயக்குனரவையில் மொத்தமுள்ள 48 பேரில் பட்டியல் சாதியினர் 5 பேர் மட்டுமே. சிறுபான்மையினர் இல்லை. பழங்குடியினர் இல்லை. 18 பேர் பெண்கள்.

அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் 6 பேரில் பட்டியல் சாதியினர் ஒருவர். சிறுபான்மையினர் இல்லை. பழங்குடியினர் இல்லை. 3 பேர் பெண்கள்.