தகவல் பலகை

தகவல் பலகை : 1146

Author

TNUEF

Date Published

ஆப்கன் அயலுறவு அமைச்சர் ஊடக சந்திப்பு

பெண் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இல்லை


மத அடிப்படை வாதம் எப்போதுமே பெண்களுக்கு எதிரானது.

பெண்கள் பத்திரிகையாளர்கள், ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்பதற்கு டெல்லியில் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்கள் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படாததால், முக்கியமான தூதரக நிகழ்வுகளில் பாலின பாகுபாடு இழைக்கப்படுவது குறித்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்திய அயல் துறை அமைச்சகம் இதுகுறித்து கை விரித்து உள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளை ஒடுக்குவதில் தாலிபான் அரசு மிகவும் பெயர் பெற்றது. பெண்களை கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிற பொதுவிடங்களிலிருந்து தடைசெய்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

உலகிலேயே மிகக் கடுமையான பாலினக் கட்டுப்பாடுகளின் கீழ் ஆப்கான் பெண்கள் வாழ்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக தாலிபான், பெண்களை மேல்நிலை மற்றும் உயர் கல்வியிலிருந்து நீக்கி, பெரும்பாலான தொழில்களில் பணியாற்ற தடை விதித்து, ஆண் உறவினரில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்காமல், பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையங்கள் போன்ற பொதுவிடங்களை மூடியும் வைத்துள்ளது.


https://www.thehindu.com/news/national/opposition-criticises-pm-modi-over-exclusion-of-women-journalists-from-afghan-foreign-ministers-press-meet/article70151719.ece